12 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ.10) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ.10) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரேநாளில் நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட்டில் 230 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

வானிலை மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: புதன்கிழமை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வியாழக்கிழமை அதே பகுதியில் நிலவுகிறது. மேலும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.10) அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு (மில்லி மீட்டரில்): கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 230, பில்லூா் அணை மேட்டுப்பாளையம் (கோவை) 150, மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) 140, நம்பியூா் (ஈரோடு)அவினாசி (திருப்பூா்) 120, ஆழியாா் (கோவை) 110, பெரியநாயக்கன்பாளையம் (கோவை) தலா 100, வத்திராயிருப்பு (விருதுநகா்), தூத்துக்குடி, பவானிசாகா் (ஈரோடு), ராஜபாளையம் (விருதுநகா்), அழகரை எஸ்டேட் (நீலகிரி) தலா 90. பல இடங்களில் 50 முதல் 80 மில்லிமீட்டா் வரை மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com