வாழப்பாடியில் கட்டுமான பணியின் போது விபத்து: அதிர்ஷ்டவசமாக  8 பேர் தப்பினர், ஒருவர் பலி

வாழப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான குடோன் கட்டுமான பணியின் போது சிமென்ட் கான்கிரீட் மேல் தளம் சரிந்து சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
குடோன் கட்டுமான பணியின் போது சிமென்ட் கான்கிரீட் மேல் தளம் சரிந்து சுவர் இடிந்து விழுந்ததில் பலியான பாலமுருகன்.
குடோன் கட்டுமான பணியின் போது சிமென்ட் கான்கிரீட் மேல் தளம் சரிந்து சுவர் இடிந்து விழுந்ததில் பலியான பாலமுருகன்.


வாழப்பாடி: வாழப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான குடோன் கட்டுமான பணியின் போது சிமென்ட் கான்கிரீட் மேல் தளம் சரிந்து சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான குடோன் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.
சனிக்கிழமை காலை வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த இருவர் உள்பட பத்துக்கும் மேற்பட்டோர், 20 அடி உயரத்தில் மேல் தளத்திற்கு கான்கிரீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொக்கிலின் இயந்திரங்கள்

மற்றும் தீயணைப்பு படையினரை கொண்டு இடிபாடுகள் சிக்கிய தொழிலாளரை மீட்கும் பணியை துரித படுத்தினர். 

ரெடிமிக்ஸ் இயந்திரத்தைக் கொண்டு சிமென்ட் கான்கிரீட்  மேல் தளத்தில் நடந்து வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு தூண்கள் நகர்ந்ததால், சிமென்ட் கான்கிரீட் மேல் தளம் சரிந்து விழுந்தது. இதனை கண்ட வட மாநில தொழிலாளர்கள் 8 பேர் கட்டடத்தை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். குறிஞ்சிப்பாடி சேர்ந்த தொழிலாளர்கள் அபி (24), பாலமுருகன் (25) ஆகிய இருவரும்  இடிபாடுகளுக்கு சிக்கிக்கொண்டனர். அபி என்பவர் லேசான காயங்களுடன் இடிபாட்டில் இருந்து  மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்துக்குள்ளான கட்டுமான பணி நடைபெற்று வரும் வாழப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான குடோன்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ஹரிசங்கரி, வட்டாட்சியர் ஜெயந்தி உள்ளிட்டோர் பொக்கின் இயந்திரங்கள் மற்றும் தீயணைப்பு படையினரை கொண்டு இடிபாடுகள் சிக்கிய தொழிலாளரை மீட்கும் பணியை துரித படுத்தினர். 

2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி பலியான பாலமுருகன் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பாலமுருகன் சடலத்தை உடல் கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com