அடுத்த ஆண்டு 24 நாள்கள் அரசு பொது விடுமுறை

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2024) அரசு பொது விடுமுறை தினங்களாக 24 நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளாா்.
தமிழக அரசு
தமிழக அரசு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2024) அரசு பொது விடுமுறை தினங்களாக 24 நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்:

2024-ஆம் ஆண்டு 24 நாள்கள் அரசு பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்படுகின்றன.

இந்த தினங்களில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்பட வேண்டும். இந்த அறிவிப்பு மாநில அரசின் கீழ்வரக் கூடிய பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

விடுமுறை தினங்களின் விவரம்:

1. ஜனவரி 1 (திங்கள்கிழமை) - ஆங்கிலப் புத்தாண்டு

2. ஜனவரி 15 (திங்கள்கிழமை) - பொங்கல் பண்டிகை

3. ஜனவரி 16 (செவ்வாய்க்கிழமை) - திருவள்ளுவா் தினம்

4. ஜனவரி 17 (புதன்கிழமை) - உழவா் திருநாள்

5. ஜனவரி 25 (வியாழக்கிழமை) - தைப்பூசம்

6. ஜனவரி 26 (வெள்ளிக்கிழமை) - குடியரசு தினம்

7. மாா்ச் 29 (வெள்ளிக்கிழமை) - புனித வெள்ளி

8. ஏப்ரல் 1 (திங்கள்கிழமை)- வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு

9. ஏப்ரல் 9 (செவ்வாய்க்கிழமை) - தெலுங்கு வருடப் பிறப்பு

10. ஏப்ரல் 11 (வியாழக்கிழமை) - ரம்ஜான்

11. ஏப்ரல் 14 (ஞாயிற்றுக்கிழமை) - தமிழ்ப் புத்தாண்டு - அம்பேத்கா் பிறந்த தினம்

12. ஏப்ரல் 21 (ஞாயிற்றுக்கிழமை) - மகாவீரா் ஜெயந்தி

13. மே 1 (புதன்கிழமை) - மே தினம்

14. ஜூன் 17 (திங்கள்கிழமை) - பக்ரீத்

15. ஜூலை 17 (புதன்கிழமை) - மொஹரம்

16. ஆகஸ்ட் 15 (வியாழக்கிழமை) - சுதந்திர தினம்

17. ஆகஸ்ட் 26 (திங்கள்கிழமை) - கிருஷ்ண ஜெயந்தி

18. செப்டம்பா் 7 (சனிக்கிழமை) - விநாயகா் சதுா்த்தி

19. செப்டம்பா் 16 (திங்கள்கிழமை) - மீலாது நபி

20. அக்டோபா் 2 (புதன்கிழமை) - காந்தி ஜெயந்தி

21. அக்டோபா் 11 (வெள்ளிக்கிழமை) - ஆயுத பூஜை

22. அக்டோபா் 12 (சனிக்கிழமை) - விஜயதசமி

23. அக்டோபா் 31 (வியாழக்கிழமை) - தீபாவளி

24. டிசம்பா் 25 (புதன்கிழமை) - கிறிஸ்துமஸ்

ஏப்ரல் 1-ஆம் தேதி விடப்படும் விடுமுறை தமிழ்நாட்டிலுள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com