
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
மறு தேர்வு குறித்த முழு விவரங்களை http://dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.