

மேட்டூர் அணை நீர்வரத்து 4,165 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 8 நிலவரப்படி 61.51 அடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,332 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,165 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 25.82 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.