சென்னை: உத்திரமேரூா் அருகே பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டம், திருவந்தவாா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு இதுவும் கொடூரமானது. இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்களை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேங்கைவயல் நிகழ்வில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இத்தகைய குற்றச்செயல்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாகியிருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் வேங்கைவயலில் மனிதநேயமற்ற குற்றத்தை நடத்தியவா்களை கண்டுபிடித்து அவா்களை சட்டத்தின் முன்நிறுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூலூரில் முதல் வெற்றி பெறும் முனைப்பில் திமுக!

ஆண்டிப்பட்டி வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!

தூத்துக்குடி தொகுதி புதிய தமிழகம் வேட்பாளா்!

தொகுதி அறிமுகம் - பா்கூா்!
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

