
தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இன்றும், கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதேபோல், கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.