அரக்கோணத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் திருட்டு முயற்சி!

அரக்கோணத்தில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஐன்னலை பெயர்த்தெடுத்து திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அரக்கோணத்தில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஐன்னலை பெயர்த்தெடுத்து திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது. 

சென்னை, கர்நாடக உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாகவும் சிக்கிம் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து தன்விருப்ப ஓய்வு பெற்றவர் தினகரன். இவரது வீடு அரக்கோணத்தில் 5ஆவது டவுன்ஹால்  தெருவில் உள்ளது. சென்னை, அண்ணா நகரில் உள்ள வீட்டில் வசித்து வரும் நீதிபதி மாதத்தில் ஓரு வாரம் அரக்கோணம் வீட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

திங்கள் கிழமை காலை நீதிபதி வீட்டிற்கு வந்த அவரது உறவினர்கள் வீட்டில் பின்பக்க ஜன்னல் பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது குறித்தும் வீட்டினுள் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பது குறித்தும் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த அரக்கோணம் நகர காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராணிப்பேட்டை மாவட்ட தடயவியல் நிபுணர்கள் சம்பவ வீட்டில் கைரேகைகளை பதிவு செய்தனர். 

நீதிபதி தினகரன் வீட்டில் உயர் மதிப்பு பொருள்கள் எதுவும் இல்லாத நிலையில் எதேனும் ஆவணங்களை களவாடிச் செல்ல திருடர்கள் வந்திருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com