அண்ணாமலை தில்லி பயணத்தால் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ரத்து!

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் தில்லி பயணத்தால் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் தில்லி பயணத்தால் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து மத்திய பாஜகவுக்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை அளித்திருந்தார். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (அக். 2) நேரில் சென்று சந்தித்துப் பேசினார். 

இதனிடையே சென்னை திரும்பாமல் தில்லியிலேயே அண்ணாமலை தங்கியிருக்கிறார்.

பாஜகவின் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. 

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், இக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பங்கேற்கவுள்ளதாக இருந்தது.

இந்த நிலையில், அண்ணாமலை தில்லியிலிருந்து சென்னை திரும்பாததால், இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் கூட்டம் வேறு தேதியில் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோ்தல் தொடா்பான ஆலோசனைக்காக அவா் தில்லிக்கு சென்றுள்ளதால் மேட்டுப்பாளையத்தில் 4 ஆம் தேதி நடைபெற இருந்த நடைப்பயணம் அக்டோபா் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com