சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

திருச்சி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் இருந்த தனி விமானம் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

News image
Updated On :6 அக்டோபர் 2023, 7:55 am

DIN

சென்னை: சென்னையில் இருந்த தனி விமானம் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை காலை 12 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த முதல்வருக்கு கட்சி நிா்வாகிகள் அங்கு வந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னா், சாலை மாா்க்கமாக தஞ்சாவூர் செல்லும் முதல்வர், அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மீண்டும் தஞ்சாவூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்து சென்னை திரும்புகிறார். 

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருவதை அடுத்து, பாதுகாப்பு காரணம் கருதி முதல்வா் பயணம் செய்யும் சாலைகளில் ‘ட்ரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.