கருணாநிதிக்கு மட்டுமல்ல எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய் வீடு: முதல்வர் 

கருணாநிதிக்கு மட்டுமல்ல தனக்கும் திராவிடர் கழகம்தான் தாய் வீடு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதிக்கு மட்டுமல்ல எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய் வீடு: முதல்வர் 
Updated on
1 min read

கருணாநிதிக்கு மட்டுமல்ல தனக்கும் திராவிடர் கழகம்தான் தாய் வீடு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் பேசியதாவது, முன்னாள் முதகல்வர் அண்ணாவின் மறைவுக்கு பின் முதல்வர் பதவியை கருணாநிதி ஏற்க மறுத்தார். கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என கூறியவர் பெரியார். அண்ணாவை சந்திப்பதற்கு முன்பே பெரியாரை சந்தித்தவர் கருணாநிதி. சுயமரியாதைகாரராக கருணாநிதி 95 ஆண்டுகள் வாழ்ந்தார். 

அண்ணன் அழகிரி திருமணத்தில் பெரியாருக்கு நான் தான் உணவு பரிமாறினேன். கருணாநிதிக்கு மட்டுமல்ல எனக்கும் திராவிடர் கழகம் தான் தாய் வீடு. மிசா காலத்தில் எனக்கு தைரியம் கொடுத்தவர் கி.வீரமணி. திகவும் திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி போன்றது என அண்ணா சொன்னார். நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என கருணாநிதி சொன்னார். உடலும்-உயிரும் என நான் சொல்கிறேன்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு வீரமணி தான் எனக்கு கொள்கை வழிகாட்டி. திமுகவுக்கும், திகவுக்கும் உள்ள நட்பு உலகில் வேறு எந்த இயக்கங்களுக்கும் இருந்தது இல்லை. கலைஞர் நூற்றாண்டு விழா நடத்த முழு உரிமையும் திராவிடர் கழகத்துக்கு உண்டு. இந்தியா கூட்டணி அரசியல் கூட்டணியல்ல, கொள்கை கூட்டணி. பட்டியலின இடஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது.

தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்பதில் உறுதியாக உள்ளோம். தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய மாநிலமாக மலர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com