

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில், கல்லூரி மாணவன், மாணவி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காஞ்சிபுரம் அருகே கீழம்பியிலிருந்து செவிலிமேடு செல்லும் சாலையில் குண்டுகுளம் என்ற கிராமம் அருகே முன்னே சென்ற கனரக லாரியை பைக்கில் சென்றவர்கள் முந்தமுயன்ற போது எதிரே வந்த கனரக லாரி பைக் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதையும் படிக்க.. இதயத்துக்காக தினமும் 50 படிகள் ஏறினால் போதும்!
இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ராகுல் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த மோனிஷா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பாக பாலுசெட்டிசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் கீழம்பியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தனர். இருவரது உடல்களும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.