வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சென்னையில் தற்கொலைக்கு முயலும் பெண்களில் பாதிப் பேர் 25 வயதுக்கும் குறைந்தவர்கள்!

சென்னையில் தற்கொலைக்கு முயலும் பெண்களில் பாதிப் பேர் 25 வயதுக்கும் குறைந்தவர்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:18 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் தற்கொலைக்கு முயலும் பெண்களில் பாதிப் பேர் 25 வயதுக்கும் குறைந்தவர்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும் தற்கொலைக்கு முயற்சித்து அனுமதிக்கப்பட்ட பாதிப் பெண்கள் 25 வயதுக்கு குறைவானவர்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனையின் மனநல மருத்துவத் துறை சார்பில் “பெண்களின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள்” என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் வெளியான தகவல்:

“அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரை 5 மாதத்தில் மட்டும் 170 பெண்கள் தற்கொலைக்கு முயற்சித்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில், 79 பெண்கள் 25 வயதுக்கும் குறைவானவர்கள். அவர்களில் 73 பேர் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை முடித்துள்ளனர்.  17 சதவிகிதம் பேர் மட்டுமே கல்வி அறிவு இல்லாதவர்கள்.

மேலும், 99 பெண்கள் வேலையில்லாமல் வீட்டில் இருப்பவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

குறிப்பாக, தற்கொலை முயற்சித்தவர்களின் 65% பெண்கள் திருமணமானவர்கள், 27% திருமணம் செய்யாத பெண்கள். கணவரை பிரிந்து வாழும் 4 பெண்களும், 4 விதவைகளும் ஆவர்.

இவர்களின் 148 பேர் தனிக் குடும்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். 92 பேர் நகரப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்டு இறக்கும் பெண்களில் 47 சதவிகிதம் பேர் 18 முதல் 25 வயதுடைய பெண்கள் ஆவர். 26-35 வயதுவரை 24% பெண்கள், 36-45 வயதுவரை 19% பெண்கள், 46-55 வயதுவரை 7% பெண்கள், 56-65 வயது வரை 3% பெண்கள் தற்கொலை செய்துள்ளனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக தற்கொலை பதிவான மாநிலங்களின் பட்டியலில் 2018 முதல் 2021 வரை தமிழகம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 2021-இல் சென்னை இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

2015 முதல் 2018 வரையிலான தரவுகளை பார்க்கும் போது கடைசி 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மனநிலை தடுமாற்றம் அல்லது ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக 25 வயதுக்கு குறைவான பெண்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.