சென்னையில் 21 சிறு கால்வாய்களைப் புனரமைக்கத் திட்டம்!

சென்னையில் நந்தனம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 21 சிறு கால்வாய்களை ரூ.86.4 கோடி செலவில் புனரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் 21 சிறு கால்வாய்களைப் புனரமைக்கத் திட்டம்!
சென்னையில் 21 சிறு கால்வாய்களைப் புனரமைக்கத் திட்டம்!


சென்னை: சென்னையில் நந்தனம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 21 சிறு கால்வாய்களை ரூ.86.4 கோடி செலவில் புனரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த புனரமைப்புப் பணிகளுக்குமான நிதியை சென்னை ஆறுகள் மீட்பு அறக்கட்டளை ஒதுக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது எவ்வாறு தொடங்கி செயல்படுத்தப்படும் என்பது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, முதலில் சிறு கால்வாய்களுக்கு வந்து சேரும் கழிவுநீரைத் தடுத்து, கால்வாய்களில் ஓடும் கழிவுகளை அகற்றி, இருபக்கமும் பக்கவாட்டு சுவர்கள் எழப்பி, குப்பைகள் அதிகம் கொட்டப்படும் இடங்களில் மூடிகளை அமைத்து சென்னை முழுவதும் உள்ள 21 சிறு கால்வாய்கள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சிறு கால்வாய்களை நன்று ஆழமாக தூர்வாரி, மழைக்காலங்களில் அதிகப்படியான வெள்ள நீர் இதில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள. இதற்கான ஒப்பந்தப்புள்ளி நவம்பர் மாதத்தில் கோரப்பட்டு, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசார்பாடியில் ஓடும் கால்வாய், அம்பத்தூர் அருகே உள்ள நொளம்பூர் கால்வாய், நந்தனம், நுங்கம்பாக்கம், எம்ஜிஆர் நகர் கால்வாய் போன்றவையும் புனரமைக்கப்படும் கால்வாயில்களில் இடம்பெற்றுள்ளன.

பருவமழைக் காலங்களில், இந்த கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழை மற்றும் கழிவுநீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் கலப்பது இதன் மூலம் தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் தண்ணீர் பாய்ந்தோட வேண்டும் என்றால், இந்த சிறு கால்வாய்கள் புனரமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், இந்த கால்வாய்ப் பகுதிகளில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு, வேலிகள் அமைக்கப்பட வேண்டியது சென்னை மாநகரின் வெள்ளத் தடுப்புக்கு மிகவும் அவசியம் என்றும் சென்னை ஆறுகள் மீட்பு அறக்கட்டளை அமைப்பு சார்பில் கூறப்படுகிறது.

இந்த சிறு கால்வாய்களை புனரமைப்பது மட்டும் போதாது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை பராமரிப்பதும் அவசியம் என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பல பகுதிகளில் கழிவுநீர் வெளியேற்றும் வசதி இல்லாதமே, இந்த சிறு கால்வாய்கள் மோசமான நிலைக்குத் தள்ளப்படக் காரணமாக இருப்பதாகவும், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் இருப்பதுபோல புறநகர்ப் பகுதிகளிலும் முழுமையாக இந்தப் பணிகள் நடந்துவிட்டால், 21 சிறு கால்வாய்களும் மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்படுவது தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற கால்வாய்களில் கழிவுநீரை விடும் மக்களிடம் அபராதம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமும் கால்வாய்களை காப்பாற்றலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com