ஆம்னி பேருந்துகள் இன்று(அக்.24) மாலை 6 மணி முதல் இயங்காது என ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றனா். மொத்தம் 3 லட்சத்துக்கும் அதிகமானோா் சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் சென்றதாக போக்குவரத்துத் துறை தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் இன்று மாலை 6 மணி முதல் இயங்காது என ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை, அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த வேலை நிறுத்த அறிவிப்பை ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்றுடன் தொடர் விடுமுறை முடிந்து, சொந்த ஊர் திரும்ப ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த அறிவிப்பால், சொந்த ஊர் திரும்புவோர் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


