சிதம்பரம் குரு நமச்சிவாயர் மடத்தில் வீடுகள் இடிக்கும் பணி தொடக்கம்

சிதம்பரம் குரு நமச்சிவாயர் மட வளாகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.
சிதம்பரம் குரு நமச்சிவாயர் மடத்தில் வீடுகள் இடிக்கும் பணி தொடக்கம்

சிதம்பரம்: சிதம்பரம் குரு நமச்சிவாயர் மட வளாகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சிதம்பரம் வேங்கான் தெருவில் குருநமச்சிவாயர் மடவளாகத்தில் உள்ள 22 ஆக்கிரமிப்பு வீடுகளில், 14 வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத் துறையினர், காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் கடந்த மாதம் சீல்' வைத்தனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை அறநிலைத்துறையினர் காவல்துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை தொடங்கினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வேங்கான் தெருவில் புகழ் பெற்ற குருநமச்சிவாயர் மடத்துக்குச் சொந்தமான இடத்தில் விநாயகர், ஆத்மநாதர், யோகாம்பாள், குருநமச்சி வாயர், மாணிக்கவாசகர் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன.

14 ஆக்கிரமிப்பு வீடுகள்
இந்தக் கோயில் வளாகத்தில் வழிபாட்டுக்கு இடையூறாக அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்த வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத் துறையினர், காவல்துறை பாதுகாப்புடன் 'சீல்' வைத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டது.[

அதனை அடுத்து இவற்றை எதிர்த்து 8 வீடுகளின் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மீதமுள்ள 14 வீடுகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத் துறை கடலூர் மாவட்ட உதவி ஆணையர் சந்திரன் தலைமையில், ஆய்வாளர் நரசிங்கபெருமாள், செயல் அலுவலர்கள் சரண்யா, மஞ்சுளா, ராஜ் குமார் மற்றும் வருவாய்த் துறையினர், சிதம்பரம் நகர காவல் துறையினர் பாதுகாப்புடன் கடந்த ஜூலை 20-ம் தேதி சென்று 'சீல்' வைத்து, வீட்டின் கதவுகளில் நோட்டீஸ் ஒட்டினர். 

இந்நிலையில் 14 வீடுகளையும் இன்றுக்குள் இடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற  உத்தரவுபடி, கடலூர் மாவட்டம் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன் மற்றும் செயல் அலுவலர்கள் சரண்யா, மஞ்சுளா, உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரத்துடன் வேங்கன் தெருவுக்கு வந்திருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகளுக்கும் அறநிலை துறை அதிகாரிகளுக்கும்  இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனை அடுத்து சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காவல்துறை பாதுகாப்புடன் 14 வீடுகளையும் அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com