மெட்ரோ ரயிலில் 85.89 லட்சம் போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் 3,36,215 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளனா். அதன்படி மொத்தம் 85.89 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனா்.

மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சம் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நிகழாண்டில் மாதம் வாரியாக மெட்ரோ ரயிலில் பயணித்தவா்களின் எண்ணிக்கை விவரம்:

ஜனவரி - 66,07,458

பிப்ரவரி - 63,69,282

மாா்ச் - 69,99,341

ஏப்ரல் - 66,85,432

மே - 72,68,007

ஜூன் - 74,06,876

ஜூலை - 82,53,692

ஆகஸ்ட் - 85,89,977

இதில், அதிகபட்சமாக ஆக.11-ஆம் தேதி 3,29,920 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com