
மேட்டூர் அணைக்குவரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 549 கன அடியிலிருந்து 562 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.97அடியிலிருந்து 48.92அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதையும் படிக்க | வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.157.50 குறைப்பு!
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 17.13 டி.எம்.சி.யாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...