உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் இளைஞர் குத்திக் கொலை செய்த வழக்கில் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
சின்னமனூர் சாமிக்குளம் பகுதியைச் சேர்ந்த அப்தாகிர் மகன் காபில்(21).அதே பகுதியைச் சேர்ந்த காதர் மகன் முகமது ஷரீப்(19) என்பவரிடம் கடனுக்கு பணம் வாங்கியுள்ளார்.
அதை திரும்ப கேட்டும் கொடுக்காத நிலையில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. தவிர, குடும்பப் பிரச்னை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனை எடுத்து வெள்ளிக்கிழமை இரவு சின்னமனூர் - வண்டிப்பேட்டை பகுதிக்கு வந்த காபிலிடம் பணம் கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சிங்கப்பூா் அதிபா் தோ்தலில் தமிழா் வெற்றி
இதனை அடுத்து முகமது ஷரீப் அவரது மாமா அலாவுதீன் இருவரும் சேர்ந்து கத்தியால் மாறி மாறி காபிலை அதே இடத்தில் குத்திக் கொலை செய்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சின்னமனூர் போலீசார் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக முகமது ஷரீப் மற்றும் அலாவுதீன் ஆகிய இருவரும் சின்னமனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
சின்னமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


