செப்.16-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
Updated on
1 min read

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 16-09-2023 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அதுபோது, கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com