
கோப்புப்படம்
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து இன்று விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில மாதமாக பெரும்பாலாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி,சென்னையில் இன்று(திங்கள்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40 அதிகரித்து ரூ.44,120-க்கும், ஒரு கிராம் ரூ.5,515-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, சனிக்கிழமை ஒரு கிராம் ரூ.5,510-க்கும் ஒரு சவரன் ரூ.44,080-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க | நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் டிக்கெட் நகலைப் பகிருங்கள்: ஏ.ஆர். ரஹ்மான்
வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.50 காசுகள் அதிகரித்து ரூ.77.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...