
கோப்புப்படம்
நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 670 கன அடியாக குறைந்தது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.90 அடியிலிருந்து 45.01அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,266 கன அடியிலிருந்து வினாடிக்கு 670 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க: இணையவழி ஏலம்: 1.66 லட்சம் டன் கோதுமை விற்பனை
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 14.81 டிஎம்சியாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...