
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குற்றப் பின்னணி கொண்ட ரௌடிகளின் வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம், புழல், சோழவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் காவல்துறையினர் நேரடியாக ரௌடிகளின் வீடுகளுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி காவல்துறை அணையர் சங்கர் உத்தரவின் அடிப்படையில், ஆவடி காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினல் இன்று காலை முதல் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவர்கள், குற்ற வரலாறு, பல்வேறு வழக்குகளில் சந்தேகப்படுபவர்கள் என பல ரௌடிகளின் வீடுகளில் இன்று காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...