
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,707 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 43.11அடியிலிருந்து 42.49 அடியாக சரிந்தது.
இதையும் படிக்க | மகளிா் உரிமைத் தொகைத் திட்டம் இன்று தொடக்கம்: காஞ்சிபுரம் விழாவில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்கிறாா்
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 507 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,707 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 13.40 டிஎம்சியாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...