இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்: முக்கிய முடிவு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று (செப். 16) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று (செப். 16) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

வரும் 18 ஆம் தேதி முதல் நாடளுமன்றம் கூடவுள்ள நிலையில், திமுக நாடளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார். கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com