சென்னை: ஓமன் நாட்டிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த 149 பேர் தங்கம் உள்ளிட்ட ரூ.14 கோடி மதிப்பிலான பொருள்களை கடத்தி வந்தக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 14ஆம் தேதி ஓமனிலிருந்து சென்னை வந்திறங்கிய விமானத்தில் பயணித்த 156 பயணிகளில், 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 13 கிலோ தங்கம், 2500 ஸ்மார்ட்போன்கள் என ரூ.14 கோடி மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் குற்றத்துக்காக 149 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை மற்றும் தில்லி விமான நிலையங்களில் கண்காணிப்புத் தீவிரமாக இருக்கும் என்று, சென்னை, கொச்சின், ஹைதராபாத் வழியாக, நாட்டுக்குள் தங்கம் உள்ளிட்ட கடத்தல் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் இந்த சம்பவத்தைத் தவிர்த்து, கடந்த ஜனவரி முதல், இதுவரை ரூ.97 கோடி மதிப்பிலான 163 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.