
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மின்சார கேங்மேன் தொழிலாளர்கள்
கொளத்தூரில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை மின்சார கேங்மேன் தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் 5,493 ஒப்பந்த மின்சார கேங்மேன் தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கக் கோரி சென்னை கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் இன்று காலை திடீரென முற்றுகை போராட்டமும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுகட்டாயமாக கைது செய்த போலீசார், திருவள்ளூர் கூட்டுறவு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேருந்து, ரயில்களில் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் பகுதியில் காவல்துறையின் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியிலேயே பணிநிரந்தரம் கோரப்பட்டதாகவும், அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருசிலரை மட்டும் பணிநிரந்தரம் செய்ததாகவும் போராட்டக்காரர்கள் குற்றசாட்டு எழுப்பியுள்ளனர்.
இதையும் படிக்க | ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது: பாஜக எம்.பி.க்களுக்கு கனிமொழி பதிலடி
மேலும், அனைவரையும் பணிநிரந்தரம் செய்து ஆணை பிறப்பித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...