

நாமக்கல்: தமிழக நிதித்துறை செயலர் உதயச்சந்திரனின் தாயார் லீலாவதி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 72.
நாமக்கல் என்ஜிஓஓ காலனியைச் சேர்ந்தவர் த.உதயச்சந்திரன். தமிழக அரசின் நிதித்துறை செயலாளராகவும், சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவருடைய தாயார் லீலாவதி கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சேலம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி காலமானார்.
சென்னையில் அமைச்சர் உதயநிதியுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், தாயார் மறைவு செய்தி அறிந்து நாமக்கல்லுக்குப் புறப்பட்டு சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.