
கோப்புப் படம்
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் சென்ட்ரல், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம், வளசரவாக்கம், போரூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல், மணலி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பூவிந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் இரவில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Moderate thunderstorms very likely over Chennai, Chengalpattu, Kancheepuram and Tiruvallur districts pic.twitter.com/Il2ES4QtLW
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 24, 2023
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருபத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்திருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...