

மதுரையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 79 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மதுரை சுகாதார துணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது,
கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மதுரையில் ஒரே மாதத்தில் 79 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் அதிகரித்துள்ளது. ஆனால் இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள், விரைவான மீட்புக்குழுவுடன், கிராமப்புறங்களில் உள்ள 13 தொகுதிகளிலும் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகின்றனர். ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்த பூச்சியியல் குழு ஆய்வு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதாரமற்ற இடங்களை தூய்மைப்படுத்தத் துப்புரவுப் பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுற்றுப்புறத்தில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கத் தவறும் கடை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும், அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது மருத்துவமனைக்குச் செல்லுமாறு மக்களை வலியுறுத்தினார்.
டெங்கு சாதாரண காய்ச்சல் தான், மக்கள் கவலைப்படத் தேவையில்லை. அதைத் தடுக்கும் வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
ஜூன் மாதத்தில் 39 பேரும், ஜூலையில் 37, ஆகஸ்டில் 45, செப்டம்பரில் 79 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் மொத்தம் இதுவரை 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.