கிருஷ்ணகிரி அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் முற்றிலும் எரிந்து நாசமான விடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 6 நாள்கள் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை பரவலாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு பலத்த சத்தத்துடன் இடி மழை பெய்தது.
இதையும் படிக்க | அனந்தபுரி ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றம்
இந்த நிலையில் கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளி கிராமம், திருமலை நகரில் உள்ள தென்னை மரத்தில் இரவு 10 மணியளவில் இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது.
தென்னை மரத்தில் இடி தாக்கியது, மரம் தீப்பிடித்து எரிந்த விடியோ பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.