அனந்தபுரி ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றம்

சென்னை எழும்பூா் - கொல்லம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயில் அக்.1-ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றமடைகிறது.
அனந்தபுரி ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றம்


சென்னை: சென்னை எழும்பூா் - கொல்லம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயில் அக்.1-ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றமடைகிறது.

சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு தினமும் இரவு 8.10 மணிக்கும், கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் மாலை 3.40 மணிக்கும் அனந்தபுரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் அக்.1-ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படவுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து இதன் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்.1- முதல் சென்னை எழும்பூரிலிருந்து 20 நிமிஷம் முன்னதாக அதாவது இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு கொல்லத்துக்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக கொல்லத்திலிருந்து 50 நிமிஷம் முன்னதாக அதாவது பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.

மேலும், சென்னை - கொல்லம் இடையே இயக்கப்படும் ரயில் திருச்சிக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 1.05 மணிக்கும், மதுரைக்கு அதிகாலை 3.50 மணிக்கு பதிலாக அதிகாலை 3.20 மணிக்கும், திருநெல்வேலிக்கு காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 6.05 மணிக்கும் வந்தடையும்.

இதுபோல் கொல்லத்திலிருந்து புறப்படும் ரயில் திருநெல்வேலிக்கு இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்கும், மதுரைக்கு இரவு 11.15 மணிக்கு பதிலாக 9.50 மணிக்கும், திருச்சிக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.15 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 6.13 மணிக்கு பதிலாக அதிகாலை 4.43 மணிக்கும், தாம்பரத்துக்கு காலை 6.43 மணிக்கு பதிலாக அதிகாலை 5.13 மணிக்கும் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com