இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி 2-1 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. அந்த அணிக்கு இது தொடர்ந்து 3-ஆவது வெற்றியாகும்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதலில் ஈஸ்ட் பெங்கால் கோலடித்தது. 40-ஆவது நிமிஷத்தில் எட்மண்ட் லால்ரிண்டிகா அடித்த கோலால், முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது.
2-ஆவது பாதியில் உத்வேகம் பெற்ற ஜாம்ஷெட்பூர் அணிக்காக, ஸ்டீபன் எùஸ 61-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்க, ஆட்டம் 1-1 என சமன் ஆனது.
ஆட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், ரெய் டசிகவா 87-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், ஜாம்ஷெட்பூர் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் வெற்றி: இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் எஃப்சி 2-0 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது. பஞ்சாப் தரப்பில் எஃபியோங் சுங்குசி (20', 32') கோலடித்தார்.
புள்ளிகள் பட்டியலில் தற்போது, ஜாம்ஷெட்பூர் முதலிடத்தில் நிலைக்க, ஈஸ்ட் பெங்கால் 3-ஆவது இடத்திலும், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் முறையே 6 மற்றும் 7-ஆம் இடத்திலும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!

ஈஸ்ட் பெங்காலிடம் வீழ்ந்தது சென்னை
ஒடிஸா எஃப்சி-க்கு முதல் வெற்றி

கேரள பிளாஸ்டா்ஸ்-ஈஸ்ட் பெங்கால் டிரா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

