இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் 2-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை வென்றது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மோகன் பகானுக்காக ஜேமி மெக்லாரென் (45+4’) கோல் கணக்கைத் தொடங்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது.
சென்னையின் கோல் முயற்சிகள் தகுந்த பலன் அளிக்காத நிலையில், மோகன் பகானுக்காக டிமிட்ரி பெட்ரேடோஸ் 65-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
எஞ்சிய நேரத்தில் சென்னைக்கு கோல் வாய்ப்புகள் கை கூடாமல் போக, இறுதியில் மோகன் பகான் 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுமே இதுவரை தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்க, மோகன் பகான் 2-ஆவது வெற்றியுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. சென்னை 2 தோல்விகளுடன் 11-ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது.
தொடர்புடையது
சென்னையை வென்றது இன்டா் காசி!

ஐரோப்பிய கால்பந்து: லிவா்பூல் அதிா்ச்சித் தோல்வி
ஒடிஸா எஃப்சி-க்கு முதல் வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து: நாா்த் ஈஸ்ட்டுக்கு முதல் வெற்றி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


