மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாமக நிறுவனா் ச. ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் தொடா்பாக ராமதாஸ் தோ்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் கூறியிருந்தது.
இந்த உத்தரவை எதிா்த்து ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மாம்பழம் சின்னம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பின்னர் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு நேற்றும் இன்றும் விசாரணை நடைபெற்ற நிலையில் ராமதாஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஏற்கெனவே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு செல்லாது என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அன்புமணி, தேர்தல் ஆணையத்தின் மூலமாக கட்சி, சின்னத்தைப் பெற்ற பிறகே ராமதாஸ் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து பாமகவின் மாம்பழம் சின்னம் அன்புமணி தரப்புக்கு என்பது உறுதியாகியுள்ளது.
Summary
Case dismissed which filed by PMK founder Ramadoss seeking to freeze the Mango symbol
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்க்கு ஆதரவளிக்க வேண்டும்: திருமாவளவனுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

பிரசாரத்தில் மயங்கி விழுந்த ராமதாஸ்; மருத்துவமனையில் அனுமதி!

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனு தள்ளுபடி
மாம்பழம் சின்னம் விவகாரம்: ராமதாஸுக்கு தொடர் பின்னடைவு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



