தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விஜய்க்கு ஆதரவளிக்க வேண்டும்: திருமாவளவனுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு திருமாவளவனுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

News image

திருமாவளவன் | விஜய் | ராமதாஸ் - கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 11:59 am IST

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு விசிக தலைவர் திருமாவளவனுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க, இன்னும் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவை என்பதால், திருமாவளவன் தலைமையிலான விசிகவின் ஆதரவையும் தவெக கோரியுள்ளது. இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி, இன்று அறிவிக்கவுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

இதனிடையே, விஜய் ஆட்சியமைக்க விசிக ஆதரவளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது, "தமிழக மக்கள் நலன் கருதி, தமிழக மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியலில் ஈடுபட்டுள்ள திருமாவளவன், மக்களின் உணர்வுகளை மதித்து புதிய ஆட்சியை ஏற்படுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.

தவெக ஆட்சியமைக்கும் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகத் தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியமைக்க எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாதநிலையில், 107 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது. மேலும், ஆட்சியமைப்பதற்காக மற்ற கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரி வருகிறது.

இதுவரையில், தவெக ஆட்சியமைப்பதற்கு 5 இடங்களை வென்ற காங்கிரஸும், தலா 2 இடங்களை வென்ற கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. இருப்பினும், ஆட்சியமைக்க இன்னும் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவை என்பதால், திருமாவளவன் தலைமையிலான விசிகவின் ஆதரவையும் தவெக கோரியுள்ளது. இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி, இன்று அறிவிக்கவுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

Summary

PMK Former Ramadoss appeals to VCK Leader Thirumavalavan to extend support for TVK Vijay to form a government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.