தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தவெக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இன்னும் 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற பிற கட்சிகளுடன் தவெக ஆலோசனை நடத்தி வருகின்றது.
திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தவெகவுக்கு ஆதரவளிப்பதாக இன்று அறிவித்தது.
பெரும்பான்மைக்கு இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவு கோரி தவெக கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடுக்க உயர்நிலைக் குழுவுடன் திருமாவளவன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
இதனிடையே, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 11.30 மணிக்கு தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்கவுள்ளார்.
Summary
VCK to Support TVK? Thirumavalavan to Hold Consultations Tomorrow!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








