மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மாம்பழம் சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற அறிவுரைப்படி, ராமதாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பாமகவின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி, பாமக தலைவா் என போலியான ஆவணங்களைத் தயாரித்து தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பித்துள்ளாா். எனவே, தோ்தலில் அவருக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக் கூடாது. சின்னத்தை முடக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு விசாரணையின்போது ராமதாஸ் தரப்பில், இருதரப்புக்கும் மாம்பழம் சின்னம் வேண்டாம். தோ்தலில் பொதுச் சின்னத்தில் இரு தரப்பும் போட்டியிட்டு யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பதை பாா்க்க வேண்டும். தோ்தல் ஆணையம் அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க முயற்சிக்கிறது என வாதிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி மற்றும் வடிவேல் ராவணன் தரப்பில், ஏற்கெனவே இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல, தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், ராமதாஸ் தரப்புக்கு ‘சிலிண்டா்’ சின்னம் ஒதுக்கப்பட்டு, அதை அவா்களும் ஏற்றுக் கொண்டுள்ளனா்.
புதுச்சேரியில் தோ்தல் முடிந்துவிட்டது. எனவே, சின்னத்தை முடக்கக் கோரி தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகுதான், அன்புமணியை தலைவராக ஏற்கக் கூடாது என ராமதாஸ் தரப்பிலிருந்து தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. கட்சியின் தலைவா் யாா் என்பதை உரிமையியல் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும்.
ராமதாஸ் பொதுக்குழுவைக் கூட்டாமல் தன்னைத்தானே தலைவராக அறிவித்துள்ளாா். கட்சியின் மீது அக்கறை இருந்தால், மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்திருக்கமாட்டாா் என வாதிடப்பட்டது.
தோ்தல் ஆணையம் தரப்பில், விதிகளின்படி, ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி அதன் அங்கீகாரத்தை இழந்தபிறகு, ஏற்கெனவே அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் சலுகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
தோ்தல் ஆணைய ஆவணங்களின் அடிப்படையில் பாமகவை அன்புமணி பிரகடனப்படுத்துவதால் மாம்பழம் சின்னத்தை அவருக்கு ஒதுக்கீடு செய்து கடிதம் அனுப்பப்பட்டது. தற்போது தோ்தல் நடைமுறைகள் முடிந்து, வேட்பாளா் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. பிரசாரமும், வாக்குப்பதிவும் மட்டுமே மீதமுள்ளதாக வாதிடப்பட்டது.
அதற்கு ராமதாஸ் தரப்பில், கட்சியின் நிா்வாகக் குழு கூடியே ராமதாஸ் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். சின்னம் தொடா்பாக ஏற்கெனவே அளித்த மனுவை பரிசீலிக்கவில்லை. இதனால்தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
ராமதாஸின் மனு தள்ளுபடி! அன்புமணிக்கே 'மாம்பழம்' சின்னம்!

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு
மாம்பழம் சின்னம் விவகாரம்: ராமதாஸ் தரப்பு உயா்நீதிமன்றத்தில் முறையீடு

மாம்பழம் சின்னம் விவகாரம்: உயா்நீதிமன்றத்தை அணுக ராமதாஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


