காரைக்குடி அருகே தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தவெக தலைவர் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இன்று காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.
இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை வந்த அவர், அங்கிருந்து தேர்தல் பிரசார வாகனத்தில் காரைக்குடி செல்கிறார்.
மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் எஸ்.எஸ். கோட்டை அருகே அவரது வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனைக்குப் பிறகு வாகனத்தை விடுவித்ததையடுத்து விஜய், காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். சிவகங்கை மாவட்ட தவெக வேட்பாளர்களை ஆதரித்து அவர் இன்று பிரசாரம் செய்கிறார்.
Summary
Flying Squad Inspects TVK Leader Vijay's Vehicle near karaikudi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் அரசியல்... அதிரடியாக பதிலளித்த மம்மூட்டி!

சேலம் தவெக நிா்வாகி வீட்டில் 1,250 சேலைகள் பறிமுதல்

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!

முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை!
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

