முதல்வர் வேட்பாளர் விவகாரத்தால் கூட்டணி முறிவு: ஓபிஎஸ் அணி

முதல்வர் வேட்பாளர் விவகாரமே கூட்டணி முறிவுக்கு காரணம் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தால் கூட்டணி முறிவு: ஓபிஎஸ் அணி

முதல்வர் வேட்பாளர் விவகாரமே கூட்டணி முறிவுக்கு காரணம் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்ததாவது:

பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வரும் தகுதியை பெற்றுள்ளது. பாஜகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்பவர் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

அதிமுக தலைமைப் பதவியில் இருந்து இபிஎஸ்ஸை மாற்ற பாஜக வலியுறுத்தினால் அவர்கள் ஏற்பார்களா? பாஜக தேசிய தலைமையில் இருந்து எங்களிடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமருக்கு அருகே அமர்ந்துவிட்டு தற்போது கூட்டணி இல்லை எனக் கூறுவது சரியில்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்

பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:

பாஜகவின் முடிவைப் பொருத்து நானும் ஓபிஎஸ்ஸும் சேர்ந்து பேசி முடிவெடுப்போம். அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். 

2026-ல் பாஜக ஆட்சிக்கு வரும் என்று அண்ணாமலை கூறிய பிறகே இபிஎஸ் விழித்துக் கொண்டார். அண்ணா, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதற்கு இபிஎஸ் கவலைப்படவில்லை. 

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com