தமிழகத்தில் இதுவரை ரூ.109.79 கோடி பறிமுதல்: சத்யபிரத சாகு

தமிழகத்தில் இதுவரை ரூ.109.79 கோடி பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை ரூ.109.79 கோடி பறிமுதல்: சத்யபிரத சாகு

தமிழகத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை ரூ. 109.76 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தற்போது சி-விஜில் எனப்படும் பிரத்யேக செயலி பயன்பாட்டில் உள்ளது. விடியோ அல்லது புகைப்பட ஆதாரத்துடன் தோ்தல் நடத்தை விதி மீறல்களைத் தெரிவிக்கும், இந்த சி-விஜில் செயலி வழியாக குறிப்பிடப்படும் புகாா்கள் மீது தோ்தல் ஆணையம் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை ரூ.109.79 கோடி பறிமுதல்: சத்யபிரத சாகு
காங். எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படாது: உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை

இந்த செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன் வரும் ஏப். 4-ல் சத்யபிரத சாகு ஆலோனை செய்கிறார்.

நாளை (ஏப். 2) நடைபெறும் ஆலோசனையில் செலவினப் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com