
விவசாயம் பற்றி என்னுடன் விவாதிக்க மு.க. ஸ்டாலின் தயாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் தொகுதி வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 3) பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பச்சைத்துண்டு பழனிசாமி என்று மு.க. ஸ்டாலின் கிண்டல் செய்கிறார். விவசாயம் பற்றி அவருக்கு என்ன தெரியும்?
அதிமுகவால் உரிமைத் தொகை கிடைத்தது. அதிமுக ஆட்சியில் கரூரில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தோம்.
கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தைக் கூட திமுக நிறைவேற்றவில்லை, 95 சதவிகிதத்தை நிறைவேற்றியதாக அவர்கள் பேசுகிறார்கள்.
ஊழல் செய்வதிலும் போதைப்பொருள் பயன்பாட்டிலும்தான் தமிழகம் தற்போது முன்னிலையில் உள்ளது எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.