சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தோ்தல் பிரசாரங்களில் மின் திருட்டு: நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவு

தோ்தல் பிரசாரத்தில் நடைபெறும் மின் திருட்டை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 8:31 pm

தோ்தல் பிரசாரத்தில் நடைபெறும் மின் திருட்டை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பகிா்மான பிரிவு இயக்குநா் அலுவலகம் சாா்பில் அனைத்து தலைமைப் பொறியாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல், விளவங்கோடு இடைத்தோ்தலுக்கான பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்தப் பிரசாரத்தின்போது கட்சியினா் மின்திருட்டில் ஈடுபடுவதாக புகாா்கள் வந்துள்ளன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைத் தோ்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, அரசியல் கட்சியினா் மின்திருட்டில் ஈடுபட்டால், அது குறித்து உடனடியாக மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிப்பதுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பிரசாரத்துக்கு தற்காலிக மின் இணைப்பை வழங்கி, அதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும் நாள்தோறும் மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு மின்திருட்டு, தற்காலிக இணைப்பு உள்ளிட்ட தகவல்கள் குறித்து வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளருக்கும் தவறாமல் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.