விவசாயிகளை திமுக அரசு புறக்கணிக்கிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

விவசாயிகளை திமுக அரசு புறக்கணிக்கிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

விவசாயிகளை திமுக அரசு புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோடு கவுந்தப்பாடியில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று அவர் மேற்கொண்ட பிரசாரத்தில், 3 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்காக திமுக என்ன செய்தது?. அதிமுகவை முடக்க நினைத்த திமுகவின் திட்டங்கள் தவீடு பொடியாக்கப்பட்டன. அதிமுவுக்கு யார் துரோகம் செய்தாலும், அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் ஏரி, குளம், குட்டைகள் முழுமையாக தூர்வாரப்பட்டன.

விவசாயிகளை திமுக அரசு புறக்கணிக்கிறது. விவசாயிகளை காக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். 10 சதவீத வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக அழுத்தம் கொடுத்ததால் தான், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றினார்கள். அதிமுக ஆட்சியில் நீரை சேமிக்க பல தடுப்பணைகள் கட்டப்பட்டன. இந்தியா கூட்டணி கூட்டத்தில், கர்நாடகாவிடம் பேசி தண்ணீரை பெற முயற்சிக்காதது ஏன்?.

எவ்வளவு தொழிற்சாலைகள் இருந்தாலும், உணவு கொடுப்பவர் விவசாயி தான். அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1652 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் 85 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்டன. தற்போது முடக்கப்பட்டுள்ள இந்த திட்டம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும். திமுக எம்.பி.க்கள் தமிழக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com