அரசியல் கட்சி தூண்டுதலால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: இபிஎஸ்

90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் கூறுகிறார் மு.க. ஸ்டாலின்.
அரசியல் கட்சி தூண்டுதலால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: இபிஎஸ்

சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலின்பேரால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி திருவள்ளூரில் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், திமுக அறிவித்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் கூறுகிறார் மு.க. ஸ்டாலின். ஓட்டு அளித்த மக்களுக்கு திமுக என்ன செய்தது.

வேளாண்மை, தொழிற்சாலைகள் அமைந்த பகுதி திருவள்ளூர். நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக கொடுக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை செய்யப்படவில்லை.

100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் சரியாக வருவதில்லை. வேலையும் முழுதாகத் தருவதில்லை.

அரசியல் கட்சி தூண்டுதலால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: இபிஎஸ்
தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? பிரசாரத்தில் கமல் விளக்கம்

அம்மா இருசக்கர வாகனத் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், கிராமம் முதல் நகரம் வரை அம்மா மின் கிளினிக் திறக்கப்பட்டது, இவை அனைத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது.

பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது வெளியிடுவார் எனக் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் ரகசியத்தை உதயநிதி சொல்லவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து குறித்துதான் என உதயநிதி சொன்னார். ஆனால் இதுவரை செய்யவில்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது திமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்தது. அப்போது 14 ஆண்டுகளாக தமிழகத்துக்கு திமுக என்ன செய்தது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com