தமிழகத்தில் அதிகரித்த கழிவுநீர் தொட்டி மரணங்கள்!

கழிவு நீர்த் தொட்டி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மூச்சுத் திணறலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளன.
தமிழகத்தில் அதிகரித்த கழிவுநீர் தொட்டி மரணங்கள்!

கழிவு நீர்த் தொட்டி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மூச்சுத் திணறலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளன.

நாட்டில் ஆபத்தான முறையில் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியின்போது ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1993ஆம் ஆண்டு முதல் இதுவரை கழிவுநீர் தொட்டிகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 1,248 ஆக உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க இந்தாண்டு மார்ச் வரை கழிவு நீர் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த 1,116 பேரின் குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

2023 ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச் வரையிலான தரவுகளின்படி, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் கழிவு நீர்த் தொட்டிகளால் 58 பேர் இறந்துள்ளதாக தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.

1993 முதல் தமிழ்நாட்டில் மட்டும் ஆபத்தான முறையின் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியின்போது தமிழகத்தில் மட்டும் இதுவரை 256 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 204, உத்தரப் பிரதேசத்தில் 131, ஹரியாணாவில் 115 மற்றும் தில்லியில் 112 மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளது.

குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் ஒன்றாகவும், திரிபுரா மற்றும் ஒடிசாவில் தலா இரண்டாகவும், தாதர் மற்றும் ஹவேலியில் 3, ஜார்க்கண்டில் 4 ஆகவும் பதிவாகியுள்ளது.

2023 ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் 58 பேர் இதுவரை கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 11 பேரும் மகாராஷ்டிரம் மற்றும் ராஜஸ்தானில் தலா 11 பேரும், குஜராத்தில் 8, பஞ்சாபில் 6 ஆகவும் பதிவாகியுள்ளது.

2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பின்படி, சாக்கடை கழிவுநீர் சத்தம் செய்யும் பணியின்போது தொழிலாளி ஒருவர் இறந்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்த நிலையில், சாக்கடை இறப்பு வழக்குகளில் இழப்பீட்டுத் தொகையை ரூ.30 லட்சமாக உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அக்டோபரில் உயர்த்தப்பட்டது.

தேசிய ஆணையத்தின் படி, இழப்பீட்டுத் தொகையை வழங்க காலாண்டுக்கு ஒருமுறை மாநிலங்களுக்கான தலைமைச் செயலர்களுக்கு நினைவூட்டல்களையும், மாவட்ட அதிகாரிகளுக்கு மாதாந்திர நினைவூட்டல்களையும் அனுப்பி இழப்பீடு வழங்கப்படுவதை உறுதிசெய்யப்படுகிறது.

கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அதுபற்றி உள்ளூர் மற்றும் தேசிய நாளிதழில் குறைந்தது நான்கு முறையாவது விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com