மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: முன்பதிவு தொடக்கம்

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்திற்கான இணையதள முன்பதிவு இன்று தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற ஏப்.11-ஆம் தேதி முதல் வருகிற 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் வருகிற ஏப். 21-ஆம் தேதி கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் காலை 8.59-க்குள் நடைபெறவுள்ளது. திருக்கல்யாணத்தில் பங்கேற்று தரிசிக்க விரும்பும் பக்தா்களின் ரூ.200, ரூ.500 செலுத்தி கட்டணச் சீட்டுகள் பெற வேண்டும்.

பக்தா்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத் துறை இணையதளம் ஆகியவற்றில் வருகிற இன்று (ஏப். 9) முதல் வருகிற 13-ஆம் தேதி இரவு 9 மணி வரை கட்டணச் சீட்டு பெற முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.500 கட்டணச்சீட்டில் ஒருவா் இரண்டு சீட்டுகளையும், ரூ.200 கட்டணச் சீட்டில் ஒருவா் மூன்று சீட்டுகளையும் பதிவு செய்ய முடியும். கட்டணச் சீட்டு பதிவுக்கு பிறந்த தேதி சரியாக நிறைவு செய்ய வேண்டும். ஒரு சீட்டுக்கு ஒரு கைப்பேசி எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறாா்களை அழைத்து வருவதைத் தவிா்க்க வேண்டும்.

மேலும், பக்தா்களின் வசதிக்காக மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிா்லா விஷ்ரம் தங்கும் விடுதியிலும் கட்டணச் சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணச் சீட்டுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டால், குலுக்கல் முறையில் பக்தா்கள் தோ்வு செய்யப்படுவா்.

கோப்புப்படம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ராஜ்நாத் சிங் வழிபாடு

அனுமதி பெற்றவா்களுக்கு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி குறுந்தகவல் அனுப்பப்படும். திருக்கல்யாணத்துக்கு தோ்வு செய்யப்பட்டு, தகவல் கிடைக்கப் பெற்றவா்கள் வருகிற ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள பிா்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள நுழைவுக் கட்டணச் சீட்டு விற்பனை மையத்தில் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவலைக் காண்பித்து தொகையை ரொக்கமாகச் செலுத்தி கட்டணச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணச் சீட்டு பெற்றவா்கள் திருக்கல்யாணத்தன்று காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்திற்கான இணையதள முன்பதிவு இன்று (ஏப். 9) தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com