ஐஸ் பிரியாணி... சின்னத்திரை பிரபலம் பகிர்ந்த விடியோ!

பிரியாணிக்கென தனி ருசியும், ரசிகர் பட்டாளமும் உள்ளதைப் போல ஐஸ் பிரியாணியும் அதிக வரவேற்பு கொண்டது.
ஐஸ் பிரியாணி... சின்னத்திரை பிரபலம் பகிர்ந்த விடியோ!
Published on
Updated on
1 min read

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த ஐஸ் பிரியாணி என்று பழைய சோற்றை உண்ணும் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

பிரியாணியில் கறித்துண்டுகள், மசாலா இருப்பதைப் போன்று, அவர் பகிர்ந்துள்ள ஐஸ் பிரியாணியில் வெங்காயமும், பச்சை மிளகாயும் உள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா ஆனந்த். பண்பலை தொகுப்பாளராக இருந்த இவர், படிப்படியாக முன்னேறி தற்போது பல தொலைக்காட்சி முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

சூப்பர் சிங்கர்ஸ், அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் இவர் தொகுத்து வழங்கி மிகப்பெரிய வரவேற்ப்பைப் பெற்றவை. யரையும் புண்படுத்தாத வகையில் நகைச்சுவை ததும்ப கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதால், இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

ஐஸ் பிரியாணி... சின்னத்திரை பிரபலம் பகிர்ந்த விடியோ!
பனி விழும் மலர் வனம்.. பாடல் அல்ல, புது சீரியல்!
dinamani

சின்னத்திரையில் இவரைப் பின்பற்றி தற்போது பல திறமையாளர்கள் மக்கள் மனங்களைக் கவர்ந்து வருகின்றனர்.

சமுகவலைதளத்தில அவ்வபோது புகைப்படங்கள், விடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் கலந்துரையாடும் மாகாபா ஆனந்த், இம்முறை ஐஸ் பிரியாணி எனக் குறிப்பிட்டு ஒரு விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

பழைய சோற்றில் தயிர் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாயுடன் பிசையும் விடியோவை வெளியிட்டுள்ளார். பிரியாணிக்கென தனி ருசியும், ரசிகர் பட்டாளமும் உள்ளதைப் போல பழைய சோறும் அதிக மசுவு கொண்டது என்பதைக் குறிப்பிடும் வகையில் இதற்கு ஐஸ் பிரியாணி எனப் பெயரிட்டுள்ளார்.

வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற ஐஸ் பிரியாணியை சாப்பிடுவது உடலுக்கு நல்லது, குடும்பஸ்தர்களுக்கும் நல்லது என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com