ரமலான்: தமிழ்நாடு முழுவதும் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!

ரமலான் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டிலும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மசூதிகளில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
ரமலான்: தமிழ்நாடு முழுவதும் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!

ரமலான் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டிலும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மசூதிகளில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் மத்தியில் ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால், மாதம் முழுவதும் 30 நாள்கள் நோன்பு மேற்கொண்டு ரமலான் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு வியாழக்கிழமை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

பள்ளி வாசல்களில் அதிகாலையிலிருந்து பெருநாளை முன்னிட்டு தொழுகைகள் நடைபெற்றன. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

தமிழ்நாட்டிலும் அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகளில் இன்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

ரமலான்: தமிழ்நாடு முழுவதும் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!
பிரதமர் வேட்பாளர் யார்? முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி

ரமலான் சிறப்பு தொழுகையில் , மக்கள் ஏற்ற தாழ்வுகளை கலைந்து அனைவரும் சமம் என்ற சமுதாய சிந்தனையுடன் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் நோய் நொடியின்றி நலமுடன் வாழவேண்டி தொழுகை நடைபெற்றது.

இந்த தொழுகையில் தென்காசி வடகரையில் 5,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை ஈத்கா மைதானத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

திருச்சி பாலக்கரை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோன்று திருவாவடுதுறையில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவொருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

கோவை உக்கடம் கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

உத்தமபாளையத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ரமலான் வாழத்துகளை தெரிவித்து ரமலான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதுபோல நெல்லை மேலப்பாளையத்தில் பஜார் திடல், மாநகராட்சி மைதானம், பாளையங்கோட்டை, கேடிசி நகர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது.

இதுபோன்று நெல்லை மாவட்டத்தில் ஏர்வாடி, களக்காடு, பத்தமடை, பேட்டை, என இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் ரமலான் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது .

ரமலான்: தமிழ்நாடு முழுவதும் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!
ரூ.1,12,400 சம்பளத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை!

ரமலான் பண்டிகையையொட்டி சேலத்திலும் உள்ள முக்கிய மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் அருகில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியிலும் சுல்தான்பேட்டை பள்ளி வாசல், ஜிம்மா மசூதி, காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை 7 மணிமுதல் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்,முதியவர்களும் கலந்து கொண்டு தங்களின் பெருநாள் தொழுகையை நபிவழியில் நிறைவேற்றினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பாக சுமார் 6 இடங்களில் இன்று பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

மதுரையில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான மசூதியான கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மசூதியில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

ரமலான் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் அந்தப்பகுதிகளில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்று இஸ்லாமியர்கள் ஒருவொருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டு ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com