தயாராகிறது மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச்சாலை!?

தயாராகிறது மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச்சாலை!?
தயாராகிறது மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச்சாலை!?

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணியாக மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் இடையே ஆறுவழிச்சாலை அமைக்கும் பணி நிறைவடையவிருக்கிறது.

இந்தப் பணிகள் முடிந்ததும், கிட்டத்தட்ட நான்கு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, நெமிலி (ஸ்ரீபெரும்புதூர்) மற்றும் சென்னசமுத்திரம் (வாலாஜாபேட்டை) ஆகிய இரண்டு சுங்கச் சாவடிகளிலும் கட்டணங்களை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைக் கழகம் திட்டமிட்டுள்ளது.

மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையேயான 96 கிலோ மீட்டர் ஆறுவழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முடிவடையாததால், இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.

தயாராகிறது மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச்சாலை!?
90 ஆண்டுகள்.. மேட்டூர் அணையை தூர்வார எவ்வளவு செலவாகும்?

இப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இன்னும் ஒரு சில மாதங்களில் முழுமையாகப் பணிகள் முடிந்துவிடும். எனவே, அதன்பிறகு, சுங்க கட்டணங்கள் உயர்த்தும் முடிவும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சர்வீஸ் சாலைகளில் பாலங்கள் அமைப்பது போன்ற சிறு சிறுப் பணிகள்தான் இன்னமும் நிலுவையில் உள்ளது. முக்கிய சாலைகள் அமைக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டது. அதுவும் இன்னம் ஒரு சில மாதங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுவழிச்சாலையில் ஒரேயடியாகக் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்றும், படிப்படியாகவே உயர்த்தப்படும் என்றும், இச்சாலையில் தற்போது நாள்ஒன்றுக்கு 2 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையே சாலைகள் மோசமடைந்ததால், இப்பகுதியில் வெறும் 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பிறகு சீரமைப்புப் பணிகள் முடிந்த பிறகுதான் முழுக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி அளித்திருந்தது.

இது குறித்து கனர வாகன ஓட்டுநர்களும், இந்தியாவிலேயே மிக மோசமாகப் பராமரிக்கப்படும் நெடுஞ்சாலைகளில் இதற்குத்தான் முதலிடம் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

பெங்களூரு - சென்னை விரைவுச் சாலையின் விரிவாக்கமாக, மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுது. அதனுடன், ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜபேட்டை இடையேயான பணிகளும் துரித கதியில் தொடங்கியது. ஆனால், இடையிடையே பாலங்கள் அமைக்கும் பணியால் வேலைகள் தேக்கமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com